< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் கஞ்சா விற்ற மாணவர்கள் உள்பட 8 பேர் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் கஞ்சா விற்ற மாணவர்கள் உள்பட 8 பேர் கைது

தினத்தந்தி
|
22 Oct 2022 5:43 AM IST

ஈரோட்டில் கஞ்சா விற்ற மாணவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


ஈரோட்டில் கஞ்சா விற்ற மாணவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் போலீசார் சூரம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஈரோடு சூரம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்த குணசேகரன் மகன் சத்தியமூர்த்தி என்கிற அத்தி (வயது 20), காசிபாளையம் நடராஜன் மகன் கார்த்தி (25), ஸ்டாலின் வீதியை சேர்ந்த மணி மகன் ஹரிஹரன் (23), பெரியவலசு சுப்பிரமணியன் வீதியை சேர்ந்த தாமஸ் மகன் பிரிட்டோ (27) உள்பட மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்கள்

கைது செய்யப்பட்ட 8 பேரில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் மற்றும் 2 பேர் 18 வயதுடையவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 2¼ கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையில் தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில், கஞ்சா கடத்திய மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இம்தியாஜ் காஜி (22) என்பவரை ரெயில்வே போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
மேலும் செய்திகள்