< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
கேர்மாளம் குத்தியாலத்தூர் வனப்பகுதியில் 40 கிலோ சந்தன மரக்கட்டைகள் கடத்திய 4 பேர் கைது- ரூ.2½ லட்சம் அபராதம் விதிப்பு
|19 Oct 2022 3:26 AM IST
கேர்மாளம் குத்தியாலத்தூர் வனப்பகுதியில் 40 கிலோ சந்தன மரக்கட்டைகள் கடத்திய 4 பேர் கைது- ரூ.2½ லட்சம் அபராதம் விதிப்பு
தாளவாடி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகம் குத்தியாலத்தூர் காப்புக்காட்டில் வனச்சரகர் தினேஷ் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்றார்கள். அப்போது ஒரு சந்தன மரம் வெட்டப்பட்டு, சந்தன கட்டைகள் கடத்தப்பட்டிருந்தது தெரிந்தது. இதுபற்றி வனத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கானக்கரை மீசைகோனூரான் தொட்டியை சேர்ந்த ஜடைசாமி (வயது 35), முருகேஷ் (32), மகாதேவா (47) மற்றும் கர்நாடகா மாநிலம் எத்தேகவுடண்தொட்டியை சேர்ந்த மகாதேகவுடா (45) ஆகிய 4 பேர் இதில் ஈடுபட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்தார்கள். மேலும் அவர்கள் வெட்டி கடத்திய 40 கிலோ சந்தன கட்டைகளையும் பறிமுதல் செய்து, அவர்களுக்கு ரூ.2½ லட்சம் அபராதமும் விதித்தார்கள்.