< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க. பிரமுகர் கார் எரிப்பு சம்பவத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

பா.ஜ.க. பிரமுகர் கார் எரிப்பு சம்பவத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது

தினத்தந்தி
|
19 Oct 2022 3:05 AM IST

பா.ஜ.க. பிரமுகர் கார் எரிப்பு சம்பவத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புஞ்சைபுளியம்பட்டி

பா.ஜ.க. பிரமுகர் கார் எரிப்பு சம்பவத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கார் எரிப்பு

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் சிவசேகர். பா.ஜ.க. பிரமுகர். இவருக்கு சொந்தமான கார் கடந்த மாதம் 24-ந் தேதி மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக சிவசேகர் அளித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த அமானுல்லா, நியாமத்துலா, அப்துல் வகாப், கமருதீன், பஷீர் அகமது உள்ளிட்ட 5 பேரை கைது செய்து கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

தேசிய பாதுகாப்பு சட்டம்

இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஏற்கனவே கைது செய்யப்பட்ட அமானுல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமானுல்லா கோபி மாவட்ட சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்