< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
அறச்சலூரில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது; கார் பறிமுதல்
|19 Oct 2022 2:50 AM IST
அறச்சலூரில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது; கார் பறிமுதல்
ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அறச்சலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் பெருந்துறையை சேர்ந்த சதீஷ் (வயது 35) என்பதும், அவர் அறச்சலூர் பகுதியில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்களுக்கு ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சதீஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர்.