< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரியில், அனுமதியின்றி  உண்ணாவிரத போராட்ட முயற்சி; இந்து முன்னணியினர் 26 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில், அனுமதியின்றி உண்ணாவிரத போராட்ட முயற்சி; இந்து முன்னணியினர் 26 பேர் கைது

தினத்தந்தி
|
19 Sept 2022 12:15 AM IST

கிருஷ்ணகிரியில், அனுமதியின்றி உண்ணாவிரத போராட்ட முயற்சி; இந்து முன்னணியினர் 26 பேர் கைது

தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கைது செய்யக்கோரி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரதம் நடத்த போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதையும் மீறி நேற்று இந்து முன்னணி அமைப்பினர் பந்தல் அமைத்து உண்ணாவிரதம் நடத்த திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று கலைந்து போக கூறினர். அவர்கள் மறுக்கவே போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்