ஈரோடு
ஈரோட்டில் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம்- புரோக்கர்கள் 2 பேர் கைது
|ஈரோட்டில், மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோட்டில், மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உல்லாசம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவர் வேலை விஷயமாக ஈரோட்டுக்கு வந்தார்.. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டு இருந்தபோது அவர் அருகே வந்த ஒரு வாலிபர் தான் கேரளாவை சேர்ந்தவர் என்றும், தனது பெயர் ஜிபு (வயது 26) என்றும் அறிமுகப்படுத்தி கொண்டார்.
மேலும் அவர் தான் ஈரோடு அருகே உள்ள மோளகவுண்டன் பாளையம், பால தண்டாயுதம் வீதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும், அங்கு 3 பெண்கள் இருப்பதாகவும், ரூ.2 ஆயிரம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.
விபசாரம்
அதற்கு அந்த வாலிபர் சரி என்று கூறி ஜிபுவுடன் புறப்பட்டு சென்றார். அந்த மசாஜ் சென்டரில் கேரளாவை சேர்ந்த சிஜோ (25) என்பவர், 3 பெண்களை காண்பித்து இதில் உங்களுக்கு யாரை பிடித்து இருக்கிறது என்று கேட்டுவிட்டு மற்றொரு அறைக்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் 3 பெண்களிடம் பெயர்களை கேட்டு உள்ளார்.
அப்போது அந்த பெண்கள் தாங்கள் அரியானா, டெல்லி, சேலத்தை சேர்ந்தவர்கள் என்றும், மசாஜ் செய்யும் வேலை என்று சொல்லி அழைத்து வந்து தங்களை ஜிபு, சிஜோ ஆகியோர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும் தங்களை எப்படியாவது இங்கிருந்து அழைத்து சென்று விடுங்கள் என்றும் அவரிடம் கூறியுள்ளனர்.
2 பேர் கைது
அதைத்தொடர்ந்து அந்த வாலிபர் தன்னிடம் பணம் குறைவாக இருப்பதாகவும், ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுத்து வருவதாகவும் ஜிபு, சிஜோ ஆகியோரிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். பின்னர் அவர், இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் தாலுகா போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு விரைந்து சென்று, விபசாரத்தில் ஈடுபட்ட 3 அழகிகளையும் மீட்டனர்.
போலீஸ் விசாரணையில், ஜிபு, சிஜோ ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டு, கடந்த 1½ ஆண்டுகளாக அந்த பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசார தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் ஜிபு, சிஜோவை கைது செய்து கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 3 பெண்கள் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.