< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 5 பேர் கைது
சிவகங்கை
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 5 பேர் கைது

தினத்தந்தி
|
24 Aug 2022 11:03 PM IST

திருப்புவனம் அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனை

திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது சாரிபுதுக்கோட்டை கிராமம். இங்கு உள்ள ஊருணி கரை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக திருப்புவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்ே்பரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்கேதம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.

5 பேர் கைது

அதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் அருள்பாண்டி (வயது 22), சிவபாலன் (27), விக்னேஷ் (22), முருகேசன் (21), செந்தூர்பாண்டி (23) என்பதும் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. மேலும் கிருஷ்ணசாமி என்பவர் தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சா, 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கிருஷ்ணசாமியை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்