< Back
மாநில செய்திகள்
கொல்லிமலையில்  கள்ளக்காதலி அடித்துக்கொலை  விவசாயி கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலையில் கள்ளக்காதலி அடித்துக்கொலை விவசாயி கைது

தினத்தந்தி
|
19 Aug 2022 10:03 PM IST

கொல்லிமலையில் கள்ளக்காதலி உருட்டு கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேந்தமங்கலம், ஆக.20-

கொல்லிமலையில் கள்ளக்காதலி உருட்டு கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விவசாயி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வளப்பூர் நாடு ஊராட்சி அரசம்பட்டியை சேர்ந்தவர் கொங்கன் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். இவர் விவசாயம் தொடர்பாக கொல்லிமலைக்கு செல்லும் மாற்றுப்பாதையான அடிவாரத்தில் உள்ள முள்ளுக்குறிச்சிக்கு அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது மலையாளம்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கமணி (51) என்ற பெண்ணுடன் கொங்கனுக்கு தொடர்பு ஏற்பட்டது. தங்கமணிக்கு திருமணம் ஆகவில்லை. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் 2 பேரும் கொல்லிமலையில் உள்ள அரசம்பட்டி வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இதற்கிடையே சமீபத்தில் தங்கமணி திடீரென கொங்கனை விட்டு பிரிந்து சென்றார்.

அடித்துக்கொலை

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கொங்கன் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து தங்கமணியை சரமாரியாக அடித்தார். இதில் சுருண்டு விழுந்த தங்கமணி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாழவந்தி நாடு போலீசார் அங்கு விரைந்து சென்று கொங்கனை கைது செய்தனர்.

பின்னர் போலீசார், தங்கமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியை விவசாயி அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்