< Back
மாநில செய்திகள்
விவசாயி வீட்டில் நகை திருடியவர் கைது
சிவகங்கை
மாநில செய்திகள்

விவசாயி வீட்டில் நகை திருடியவர் கைது

தினத்தந்தி
|
18 Aug 2022 11:02 PM IST

விவசாயி வீட்டில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கே.புதுப்பட்டியில் உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவா என்ற வேலு (வயது 27) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், கடந்த மே மாதம் 2-ந்தேதி எஸ்.புதூர் அருகே, கே.இடையபட்டியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவரது வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகையை திருடியவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து சிவாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 பவுன் நகையை மீட்டனர்.


மேலும் செய்திகள்