< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
சிறுமியை மிரட்டிய வாலிபர் கைது
|13 Aug 2022 9:21 PM IST
சிறுமியை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் அண்ணாநகர் குட்செட் காலனி பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் மாணிக்கம் (வயது 22). லோடுமேன் வேலை பார்த்து வருகிறார். இவர் 12 வயது சிறுமி ஒருவரை குளிக்கும் போது எட்டி பார்த்து வந்ததுடன் அதை செல்போனில் வீடியோ எடுத்து உள்ளதாக கூறி மிரட்டி வந்தாராம். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சைல்டுலைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்களின் தகவலின் பேரில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.