< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பென்னாகரம் அருகே கஞ்சா விற்றவர் கைது
|3 Aug 2022 10:35 PM IST
பென்னாகரம் அருகே கஞ்சா விற்றவர் கைது
பென்னாகரம்:
பென்னாகரம் போலீசார் நேற்று பெத்தம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் ஸ்டாப் அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பையை சோதனை போட்டபோது 250 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது அவர் அஞ்சேஅள்ளியை சேர்ந்த சங்கர் (வயது 56) என்பதும் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.