< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பாகலூர் அருகே வேளாண் பொருட்கள் திருடியவர் கைது
|23 July 2022 11:26 PM IST
பாகலூர் அருகே வேளாண் பொருட்கள் திருடியவர் கைது
பாகலூர் அருகே நந்திமங்கலம் பக்கமுள்ள காரப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). விவசாயி. இவர் பலவனப்பள்ளியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேளாண் உபகரணமான தண்ணீர் தெளிப்பான்கள் மொத்தம் 280 வைத்திருந்தார். சம்பவத்தன்று இவற்றை மர்ம நபர் திருடி சென்றார். அதன் மதிப்பு ரூ.5,500 ஆகும். இதுகுறித்து சீனிவாசன் பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அதை திருடி சென்றது ஓசூர் தாலுகா வெங்கடேஷ்புரம் அருகே உள்ள பலவனப்பள்ளியை சேர்ந்த சுனில்குமார் (27) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.