< Back
மாநில செய்திகள்
வேலகவுண்டம்பட்டி அருகே  தனியார் கல்லூரி பஸ்சுக்கு தீ வைத்த வாலிபர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

வேலகவுண்டம்பட்டி அருகே தனியார் கல்லூரி பஸ்சுக்கு தீ வைத்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
17 July 2022 5:55 PM GMT

வேலகவுண்டம்பட்டி அருகே தனியார் கல்லூரி பஸ்சுக்கு தீ வைத்த வாலிபர் கைது

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூர் தேவேந்திரர் தெரு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 44). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் பஸ் டிரைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி மாணவ, மாணவிகளை வீடுகளில் இறக்கி விட்டு கல்லூரி பஸ்சை கந்தசாமி தனது வீட்டிற்கு அருகே நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இரவு சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த கந்தசாமி வெளியே வந்து பார்த்தபோது 2 பேர் பஸ்சின் வலது பின்பக்க டயர் பகுதியில் தீ வைத்து விட்டு சென்றனர்.

பின்னர் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த கந்தசாமி இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு கல்லூரி பஸ் மேலாளர் வைத்தியநாதன் இதுதொடர்பாக வேலகவுண்டன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பஸ்சுக்கு தீ வைத்தது புத்தூர் தேவேந்திரர் தெருவை சேர்ந்த மயில் மகன் மோகன் (27) என்பவர் தெரியவந்தது. இதையடுத்து மோகனை போலீசார் கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்