< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓசூரில் போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் கைது
|3 July 2022 6:32 PM IST
ஓசூரில் போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் கைது
ஓசூர்:
ஓசூர் தணிகை நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 35). இவர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் காமராஜ் காலனி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி சம்பத்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் லாரியை ஓட்டி வந்த ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்த மோகன் (24) போலீஸ்காரர் சம்பத்குமாருடன் தகராறு செய்து அவரை தாக்கினார். இதுகுறித்து சம்பத்குமார் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மோகனை கைது செய்தனர்.