< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
மது விற்ற 2 வாலிபர்கள் கைது
|18 Oct 2023 12:30 AM IST
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வெலாங்காடு மற்றும் கெண்டேயனஅள்ளி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெலாங்காட்டில் மது விற்று கொண்டிருந்த அரவிந்த் (வயது 25) மற்றும் கெண்டேயனஅள்ளியில் உள்ள பெட்டிக்கடையில் மது விற்ற சக்திவேல் (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.