< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
மது விற்ற 10 பேர் கைது
|14 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன்ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். இதேபோல் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரும் பல்வேறு இடங்களில் தொடா் சோதனை நடத்தினர். அப்போது தர்மபுரி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.