< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
சேலத்தில்மாணவியிடம் சில்மிஷம்; ஆட்டோ டிரைவர் கைது
|13 Oct 2023 2:11 AM IST
சேலத்தில் ௭-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 46). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு 12 வயதுடைய 7-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
பின்னர் சிறுமியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் விசாரணை நடத்தினார். இதையடுத்து மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பாலமுருகனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.