< Back
மாநில செய்திகள்
ஓசூரில்பியூட்டி பார்லரில் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில்பியூட்டி பார்லரில் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

தினத்தந்தி
|
7 Oct 2023 12:30 AM IST

ஓசூர்:

ஓசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஆர்.சி. தேவாலயம் எதிரே உள்ள பியூட்டி பார்லரில் விபசாரம் நடப்பதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து பியூட்டி பார்லர் நடத்தி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 31 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட இளம்பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்