< Back
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

30 Sept 2023 12:30 AM IST
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி விற்ற மிட்டப்பள்ளியை சேர்ந்த பிரேம்குமார் (வயது 36), சிங்காரப்பேடடை முனவர் பாஷா (44), மத்தூர் ராஜகோபால் (74), கே.புதூர் பெருமாள் (55) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,240 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.6,100 பறிமுதல் செய்யப்பட்டது.