< Back
மாநில செய்திகள்
ஓசூரில்கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய 6 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில்கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய 6 பேர் கைது

தினத்தந்தி
|
29 Sept 2023 12:30 AM IST

ஓசூர்:

ஓசூரில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

ரோந்து

ஓசூர் டவுன் போலீசார் மலைக்கோவில் பூங்கா அருகே நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 6 பேர் நின்றனர். போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பூட்டிய வீடுகளை உடைத்து கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டி வந்ததும், இதற்காக ஆயுதங்களுடன் அங்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய ஓசூர் சானசந்திரம் கடவுள் நகரை சேர்ந்த சஞ்சய் (19), சக்திவேல் (19), தேர்பேட்டை தனசேகர் (25) மற்றும் 18 வயதுடைய 3 நபர்கள் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்