< Back
மாநில செய்திகள்
மாரண்டஅள்ளி அருகேநிலப்பிரச்சினையில் தம்பதியை தாக்கியவர் கைது
தர்மபுரி
மாநில செய்திகள்

மாரண்டஅள்ளி அருகேநிலப்பிரச்சினையில் தம்பதியை தாக்கியவர் கைது

தினத்தந்தி
|
29 Sept 2023 12:30 AM IST

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அடுத்த தொட்டபட காண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கதுரை (வயது 52). இவர் சம்பவத்தன்று தனது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார், அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (55), ஜோதி (20), பழனியம்மாள் (50) ஆகியோர் தண்ணீர் பாய்ச்சகூடாது என்றும், நிலத்தில் எங்களுக்கும் உரிமை உள்ளது என்று கூறினர். இதை ஏற்க மறுத்த தங்கதுரை தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தங்கதுரையை தாக்கினர். இதனை தடுக்க வந்த அவருடைய மனைவி வனிதா என்பவரும் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த 2 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தங்கதுரை நேற்று மாரண்டஅள்ளி போலீசில் புகார கொடுத்தர்புகாரின்பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்