< Back
மாநில செய்திகள்
சேலம் தாதகாப்பட்டியில்தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
சேலம்
மாநில செய்திகள்

சேலம் தாதகாப்பட்டியில்தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
28 Aug 2023 1:35 AM IST

அன்னதானப்பட்டி

சேலம் தாதகாப்பட்டி, தாகூர் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 20). கறிக்கடை தொழிலாளி. இவருக்கும், சிலருக்கும் கடந்த ஆடித்திருவிழாவின் போது மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலு வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அந்த 3 பேர் பாலுவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குகை கெத்தை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஜீவா (20), ஜனா (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஷிஜேஷ்குமார் (21) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்