< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது
|26 Aug 2023 12:30 AM IST
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் குணா (வயது 23) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண்ணுக்கு திருமணம் முடிந்த பின்னர் குணாவுடன் இருந்த பழக்கத்தை துண்டித்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற குணா, அவரை உல்லாசத்துக்கு அழைத்தாராம். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் அவருடன் வாக்குவாதம் செய்த குணா அவரை தாக்கி மானபங்கம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சிங்காரப்பேடடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் குணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.