< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரியில்வாலிபரிடம் ஜேப்படி செய்த சிறுவன் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில்வாலிபரிடம் ஜேப்படி செய்த சிறுவன் கைது

தினத்தந்தி
|
8 Aug 2023 12:30 AM IST

போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி அருகே உள்ள சந்தியப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 30). இவர் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே ஒரு பேக்கரி கடை பக்கமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சிறுவன் பெரியசாமியின் பாக்கெட்டில் இருந்த ரூ.200-ஐ ஜேப்படி செய்ய முயன்றார்.

இதை கவனித்த பெரியசாமி அந்த சிறுவனை பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்