< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அரூரில்மது பதுக்கி விற்றவர் கைது
|5 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக அரூர் போலீசார் அரூர் டவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செந்தில் (வயது 29) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக செந்திலை கைது செய்தனர்.
இதேபோல் பொம்மிடி பகுதியில் சில கடைகளின் பின்பகுதியில் உரிய அனுமதியின்றி மதுபானம் அருந்த அனுமதித்தது போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.