நாமக்கல்
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது
|பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே வாழவந்தி மேலப்பட்டியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த பெண்ணின் கணவர் மற்றும் ஊர் பொதுமக்கள் சாமிநாதனை கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பெண் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு சென்ற சாமிநாதன் பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக தெரிகிறது.
இதனால் அவர் சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த சாமிநாதன் தான் வைத்திருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றார். இதுகுறித்து அந்த பெண், கணவருடன் பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்த சாமிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.