< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கர்நாடக மது விற்ற வாலிபர் கைது
|31 July 2023 12:30 AM IST
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே அருளாளம் கிராமத்தை சேர்ந்த சின்ன வீரன் மகன் சூரிய பிரதீப் (வயது 20). இவர் சட்டவிரோதமாக கர்நாடக மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் சூரியபிரதீப் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 313 கர்நாடக மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சூரிய பிரதீப்பை கைது செய்தனர்.