< Back
மாநில செய்திகள்
தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டியவர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டியவர் கைது

தினத்தந்தி
|
31 July 2023 12:30 AM IST

மத்திகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள குட்டூரை சேர்ந்தவர் அன்புமணி (வயது 21). இவர் ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடன் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் (22) என்பவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்கள் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் அரிவாளால் அன்புமணியை வெட்டினார். இதில் காயமடைந்த அன்புமணி சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அன்புமணி கொடுத்த புகாரின்பேரில்மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைதுசெய்தனர்.

மேலும் செய்திகள்