< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓசூரில்இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது
|31 July 2023 12:15 AM IST
ஓசூர்:
ஓசூர் அரசனட்டியை சேர்ந்தவர் பிரதீப் (வயது24). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (42). சமதாதானபுரம் பகுதியில் பிரதீப் தனது நண்பர்களுடன் மது குடிப்பதற்காக சென்றார். அப்போது, அங்கு வந்த மாதேஷ் பிரதீப்பின் மொபைல் போனை எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாதேஷ், அவரது நண்பர் சிவராஜ் ஆகியோர் பிரதீப்பை தாக்கினார்கள். இதில் காயமடைந்த பிரதீப் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மாதேசை போலீசார் கைது செய்தனர்.
அதே போல மாதேசின் மனைவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் பிரதீப், சக்திவேல் (28), மணி (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.