< Back
மாநில செய்திகள்
போலீசாரிடம் தகராறு செய்தவர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

போலீசாரிடம் தகராறு செய்தவர் கைது

தினத்தந்தி
|
6 July 2023 12:30 AM IST

ஓசூர்:

ஓசூர் அட்கோ போலீசார் பஸ்தி பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். அவரிடம் விசாரிக்க முயன்றபோது மது போதையில் இருந்த அந்த நபர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், போலீசார் மீது பெட்ரோலை ஊற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் விசாரணையில் அந்த நபர் சின்னகானப்பள்ளியை சேர்ந்த வடிவேல் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்