< Back
தமிழக செய்திகள்
நல்லம்பள்ளி அருகே பெண்ணை தாக்கிய முதியவர் கைது
தர்மபுரி
தமிழக செய்திகள்

நல்லம்பள்ளி அருகே பெண்ணை தாக்கிய முதியவர் கைது

தினத்தந்தி
|
6 July 2023 12:30 AM IST

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே உள்ள கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 34). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று கலைச்செல்வி கெட்டுப்பட்டி அருகே குட்டக்காடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணி, கலைச்செல்வியை கல்லால் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கலைச்செல்வி தொப்பூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்