< Back
மாநில செய்திகள்
1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு
விருதுநகர்
மாநில செய்திகள்

1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு

தினத்தந்தி
|
4 Jan 2023 12:31 AM IST

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 24 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சிவகாசி,

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 24 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

பொங்கல் தொகுப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டுள்ளது. சிவகாசி தாலுகாவில் உள்ள 143 ரேஷன் கடைகள் மூலம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 24 ரேஷன் கார்டு தாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1,000 பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது.

ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் கார்டுதாரர்களை உறுதி செய்து அதன் பின்னர் டோக்கன்களை வழங்கி வருகிறார்கள். இந்த பணி வருகிற 8-ந்தேதி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. டோக்கன் வழங்கும் பணியினை விரைவில் முடிக்க வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டி, ரேஷன் கடைக்காரர்களை கூடுதல் நேரம் எடுத்து டோக்கன்களை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசுக்கு கோரிக்கை

9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் 14-ந்தேதியும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9-ந்தேதி முதல் 13-ந் தேதி வரை உள்ள நாட்களில் விடுமுறை தினம் ஏதும் இல்லாத நிலையில் கூலி தொழிலாளர்கள் தங்களது பணிகளை விட்டு, விட்டு பொங்கல் பரிசு வாங்க வேண்டிய நிலை இருப்பதால் 14-ந்தேதி வாங்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தால் பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்