< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு
அரியலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு

தினத்தந்தி
|
5 May 2023 12:40 AM IST

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உதவித்தொகை பெற பள்ளி மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவ-மாணவிகளுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவ-மாணவிகள் அருகில் உள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவ-மாணவிகளின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்