< Back
மாநில செய்திகள்
புரவிபாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கு ஏற்பாடு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

புரவிபாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கு ஏற்பாடு

தினத்தந்தி
|
3 Jun 2022 8:49 PM IST

புரவிபாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

பொள்ளாச்சி

புரவிபாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

அரசு பள்ளி

பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 670 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். புரவிபாளையம், ஜமீன்காளியாபுரம், வடக்கிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இருப்பினும் மேலும் மாணவர்களை சேர்க்க பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்காக பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. மேலும் மாணவ-மாணவிகளின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்கு உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளுக்கு மாணவ- மாணவிகளை தயார்படுத்த மைதானம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வெங்டேஷ்வரன் கூறியதாவது:-

ஆங்கில வழிக்கல்வி

புரவிபாளையம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகள் கல்வி கற்பதற்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நடப்பு கல்வி மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இந்த பள்ளிக்கு கிராமப்புறங்களில் இருந்து மாணவ-மாணவிகள் வருகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வகுப்பறைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். இதற்காக ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் வகுப்பறைகளை சீரமைத்து வர்ணம் பூசி அழகாக்கும் பணி நடந்து வருகிறது.

பள்ளியில் வேதியியல் ஆசிரியை கவிதா கழிப்பறை கட்டுவதற்கு ரூ.1 லட்சம் பங்களிப்பு தொகையை வழங்கினார். மீதி தொகை தன்னார்வலர்கள் மூலம் திரட்டப்பட்டு கழிப்பறை கட்டப்பட்டது. துருப்பிடித்த இருக்கைகளுக்கு வர்ணம் பூசி உள்ளோம். மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக செல்வதற்கு தினமும் வரிசையில் நிற்க வைத்து பஸ்சில் ஏற்றி அனுப்பி வருகின்றோம். தற்போது 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஆங்கில வழிக்கல்வி கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்