ராமநாதபுரம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்ட தேசம் காக்கும் ராணுவ வீரர்களை தேர்ந்தெடுக்கும் முறையை கேலிக்கூத்தாக்கும் விதத்தில் மத்திய அரசு தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை எதிர்த்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் சத்தியாக்கிரக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கண்டனம்
அதன்படி ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொது செயலாளர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லதுரை அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் கோபால், நகர் தலைவர் கோபி, மாவட்ட துணை தலைவர்கள் ஜோதி பாலன், காமராஜ், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் வாணி செய்யது இப்ராகிம், வட்டாரத் தலைவர்கள் சேதுபாண்டி, செல்லச்சாமி, ராணுவ பிரிவு கோபால், மீனவர் அணி சகாயராஜ், மாவட்ட நிர்வாகிகள் அன்புச் செழியன், நிஜாம் அலிகான், சிவனாண்டி, ஆறுமுகம், சேதுபதி, முருகேசன், முருகானந்தம், ராஜீவ் காந்தி, விஜயன், பெரியார், மகளிரணி தமிழ்ச்செல்வி உள்பட மாவட்ட, நகர, வட்டார, பேரூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், சார்பு அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.