< Back
மாநில செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
மாநில செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
10 July 2023 10:13 PM IST

காங்கயத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நேற்று மாலை 4 மணியளவில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் டி.சாமியாத்தாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.சித்ரா விளக்கவுரை ஆற்றினார்.

இதில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஜி.பி.எப். பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.ஜி.பி.எப் தொகையில் கடன் வழங்க வேண்டும்.

மகப்பேறு விடுப்பு

மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் 1 வருடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்