< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
ஆரோக்கிய மாதா ஆலய தேர்பவனி
|24 Sept 2023 12:57 AM IST
ஆரோக்கிய மாதா ஆலய தேர்பவனி நடந்தது.
பொன்மலைப்பட்டி:
திருவெறும்பூர் பர்மா காலனியில் ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. திருச்சி மறை மாவட்ட கைலாசபுரம் பங்குக்கு உட்பட்ட இந்த ஆலயத்தில் தேர்பவனி நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 22-ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திருவெறும்பூர் பர்மா காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆரோக்கியமாதவை தரிசனம் செய்தனர்.