< Back
மாநில செய்திகள்
மேல்மலையனூர் அருகே வாகனம் மோதி ராணுவ வீரர் பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

மேல்மலையனூர் அருகே வாகனம் மோதி ராணுவ வீரர் பலி

தினத்தந்தி
|
16 Jun 2023 12:15 AM IST

மேல்மலையனூர் அருகே வாகனம் மோதி ராணுவ வீரர் உயிாிழந்தாா்.

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ராஜா (வயது 32), ராணுவ வீரரான இவர், விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜா, தனது மனைவி யமுனா மற்றும் 2 குழந்தைகளுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சேத்துப்பட்டுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். சின்ன நொளம்பை கூட்டு சாலை அருகில் வந்தபோது எதிரே வந்த வாகனம் ஒன்று ராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை டாக்டர்கள் ஏற்கனவே ராஜா இறந்துவிட்டதாக கூறினர். யமுனா மற்றும் குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்