சென்னை
ஆவடி அருகே டிராக்டர் மோதி ராணுவ வீரர் பலி
|ஆவடி அருகே டிராக்டர் மோதியதில் ராணுவ வீரர் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம் துருஞ்சபுரம் அடுத்த கலசப்பாக்கம் சாளையனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது 24). இவர், இந்திய ராணுவத்தில் ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவர், திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் தேவி நகர் 2-வது தெருவில் வசிக்கும் தனது தங்கை வீட்டுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பாக வந்தார். இவரது தங்கையின் கணவர் மதன் (23) அப்பகுதியில் மெக்கானிக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அருண் மற்றும் மதன் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவேற்காடு வழியாக அயப்பாக்கம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அருண் ஓட்டினார். அப்போது எதிரே வந்த டிராக்டர் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் ராணுவ வீரர் அருணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அருண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மதன் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரான போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் அன்னை அபிராமி நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (21) என்பவரை கை