ஆம்ஸ்ட்ராங் கொலை: சட்டம் ஒழுங்கை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் - விஜய் வலியுறுத்தல்
|ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.