< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
|21 Aug 2024 3:15 AM IST
சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பது தெரிய வந்தது
சென்னை,
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக சென்னை போலீசர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தாய்லாந்திற்கு தப்பி சென்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பது தெரிய வந்தது. மொட்டை கிருஷ்ணனுடன் செல்போனில் உரையாடியதாக பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.