< Back
மாநில செய்திகள்
ஆயுதப்படை போலீஸ்காரரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
மதுரை
மாநில செய்திகள்

ஆயுதப்படை போலீஸ்காரரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

தினத்தந்தி
|
1 July 2023 1:10 AM IST

ஆயுதப்படை போலீஸ்காரரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையை சேர்ந்த மலைச்சாமி மகன் பாண்டித்துரை (வயது 41). இவர் மதுரை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள ஆயுதப்படை குடிப்பியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கும், புதுநத்தம் சாலை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு பாண்டித்துரை நடந்து சென்றார்.

அப்போது ஜெகனின் நண்பர்கள் பாலமுரளி, முருகன் ஆகியோர் வழிமறித்து அவரிடம் தகராறு செய்தனர். மேலும் அவர்கள் பாண்டித்துரையை கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டனர். இதில் காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுரளி (29), முருகன் (33) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்