< Back
மாநில செய்திகள்
அர்ஜூன் சம்பத் உருவபொம்மை எரிப்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

அர்ஜூன் சம்பத் உருவபொம்மை எரிப்பு

தினத்தந்தி
|
5 July 2022 3:25 AM IST

அர்ஜூன் சம்பத் உருவபொம்மை எரித்தது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பற்றி இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. எனவே இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று அர்ஜூன் சம்பத் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார். கோபி, பாபு, ஜோஸ்பின், ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து தடையை மீறி போராட்டம் நடத்தியதாக திருமாவேந்தன் உள்பட 7 பேரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்