அரியலூர்
இந்திய கிரிக்கெட் அணியில் அரியலூர் வீரர் தேர்வு
|இந்திய கிரிக்கெட் அணியில் அரியலூர் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜெயங்கொண்டம்:
மலேசியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் மாதம் 11, 12, 13-ந் தேதிகளில் நடைபெறுகிறது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணிக்கும், மலேசியாவில் உள்ள தேசிய அணிக்கும் நடைபெறும் இப்போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்திய அணியின் கேப்டனாக மதுரையை சேர்ந்த சச்சின் சிவாவும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் காந்தன், அரியலூர் மாவட்டம் உதயநத்தத்தை சேர்ந்த கார்த்திக் ஆகிய வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராமநாதபுரத்தை சேர்ந்த அப்பாஸ் அலியும், இந்திய அணியின் மேலாளராக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அரிச்சந்திரனும் தொடர்வார்கள் என்று மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாகவும், மேம்படுத்தும் விதமாகவும் இந்த போட்டி முதல்முறையாக கிரிக்கெட் வீரர்களுடன், மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இந்திய அணியில் அரியலூர் மாவட்ட வீரர் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டது, அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார்த்திக்கிற்கு அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.