< Back
மாநில செய்திகள்
அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பதவியேற்பு
அரியலூர்
மாநில செய்திகள்

அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பதவியேற்பு

தினத்தந்தி
|
16 Feb 2023 12:45 AM IST

அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பதவியேற்றார்.

அரியலூர் நகரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் சங்கத்தில் சில்லறை விற்பனை தொகை வங்கியில் செலுத்தாதது, பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை முறைகேடு, செலவு கணக்கை சரிவர தாக்கல் செய்யாது உள்ளிட்ட முறைகேடு தொடர்பாக பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வத்தை தற்காலிக பதவி நீக்கம் செய்து பால்வளம் துணை பதிவாளர் நாகராஜ் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து துணைத்தலைவராக இருந்த கல்லங்குறிச்சி பாஸ்கர் தலைவராக பதவி ஏற்றார். இவருக்கு செயலாளர் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்