< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
அரியலூர் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்
|28 May 2023 12:18 AM IST
அரியலூர் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்ட தி.மு.க. கூட்டம் நாளை 29ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு புறவழிச்சாலையில் உள்ள ரிதன்யா மஹாலில் நடைபெறுகிறது. அவைத்தலைவர் மாணிக்கம் தலைமையில், கழக சட்டத்திட்ட திருத்தகுழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், கொள்கைப் பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
அதுசமயம் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கேட்டு கொண்டுள்ளார்.