புதுக்கோட்டை
அரிமளம் ஒன்றிய குழு தலைவர் இல்ல திருமணம்
|அரிமளம் ஒன்றிய குழு தலைவர் இல்ல திருமணம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் முத்து, அரிமளம் ஒன்றிய குழு தலைவர் மேகலா. இவர்களின் மகன் டாக்டர் பாலமுரளிக்கும், டாக்டர்கள் நாகராஜன், அவ்வை ஆகியோரின் மகள் டாக்டர் அனிதாவிற்கும் திருமணம் அரிமளம் சி.ஆர்.வி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நடத்தி வைத்தார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மாங்குடி, சின்னத்துரை, முத்துராஜா, தொழிலதிபர் பி.எல். படிக்காசு, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், அரிமளம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் முனசந்தை சுப்பிரமணியன், சமுத்திரம் கண்ணன், கடியாபட்டி உமாமகேஸ்வரி சோமசுந்தரம், பெருங்குடி ராஜேந்திரன், கீழப்பனையூர் பழனியப்பன் ராமசாமி, திருவாக்குடி கலாகருப்பையா, மிரட்டுநிலை வீரமணி மருதமுத்து, அரசு ஒப்பந்ததாரர்கள் அம்புராணி நாகராஜன், வடக்குப்பட்டி சவரிமுத்து என்ற சின்னத்தம்பி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஆசிரியர் முத்து, ஒன்றிய குழு தலைவர் மேகலா ஆகியோர் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.