< Back
தமிழக செய்திகள்

புதுக்கோட்டை
தமிழக செய்திகள்
அரிமளம் முத்துமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

18 March 2023 12:57 AM IST
அரிமளம் முத்துமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
அரிமளம் மார்க்கெட் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த தேர் சக்கரங்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மர சக்கரம் ஆகும். இந்த மர சக்கரம் பழுதடைந்ததால் திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து இரும்பாலான சக்கரமும், அச்சும் தயார் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. வெள்ளோட்டமானது முத்துமாரியம்மன் கோவிலை சுற்றி வலம் வந்தது. முன்னதாக தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.