< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானைக்கு உடல்நலம் பாதிப்பு.!
|24 Jun 2023 2:22 PM IST
அரிக்கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால், அதற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை,
கேரளா மற்றும் தேனி மாவட்ட மக்களை அச்சுறுத்திவந்த அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்டு, நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. தற்போது அரிக்கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால், அதற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே அங்குள்ள யானைக்கூட்டத்துடன் சேராமலும், முறையாக உணவை உட்கொள்ளாமலும் அதே இடத்தில் தனியாக சுற்றிவருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
யானையை தொடர்ந்து கண்காணித்துவரும் மருத்துவ குழுவினர், அதற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துவருகின்றனர். மேலும், யானை ஊருக்குள் வராத வகையில் தொடர்ந்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.