< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'தனக்குப் பின் தனது வாரிசுகள் வர வேண்டும் என்பதை விரும்பாதவர் அறிஞர் அண்ணா' - அண்ணாமலை
|3 Feb 2024 2:26 PM IST
அறிஞர் அண்ணா மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தி.மு.க. சார்பில் சென்னையில் இன்று அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
இந்நிலையில் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர், மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என, மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர், தான் தொடங்கிய கட்சியில் கூட, தனக்குப் பின் தனது வாரிசுகள் வர வேண்டும் என்பதை விரும்பாதவர்.
தி.மு.க. நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.